ஆர்.கே.நகரில் அரங்கேறிய எட்டு கேலிக்கூத்துகள்

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இந்த தேர்தலின் முடிவை தமிழகமே உற்றுநோக்கி வருவது மட்டுமின்றி தேசிய கட்சிகளும் இந்த தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் வேட்புமனுதாக்கல் முடிவடைந்து வேட்புமனுக்கள் பரிசீலனையும் முடிந்துவிட்டது. இந்த தொகுதி மக்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யும் முன்னர் இதுவரை நடந்துள்ள கேலிக்கூத்துக்களை அறிந்து அதன்பின்னர் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யுங்கள்
1. சரத்குமாரின் சமக கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு: ஒரு கட்சியில் தலைவராக இருக்கும் சரத்குமாருக்கு தனது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அந்த தொகுதியை சேர்ந்த பத்து பேர் வேட்பாளரை முன்மொழிய வேண்டும் என்ற விதி தெரியாதா? 10 பேர் முன்மொழியாததால் சரத்குமார் கட்சியின் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
2. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சின்னம்மா சின்னமா என்று குலதெய்வத்தை வழிபடுவது போல கூறி வந்த அதிமுகவினர், அந்த தொகுதி அம்மா அதிமுக வேட்பாளர் தினகரனின் பிரச்சார போஸ்டர்களில் தப்பித்தவறி கூட சின்னம்மாவின் பெயரோ புகைப்படமோ இல்லாமல் பார்த்து கொண்டனர். தமிழகம் முழுவதிலும் சின்னம்மாவுக்கு உள்ள எதிர்ப்பலையை இப்போதுதான் புரிந்து கொண்டார்களா? அல்லது தேர்தலுக்கு பின்னர் சின்னம்மா ஆசியில் வெற்றி பெற்றவர் என்ற புராணத்தை ஆரம்பிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
3. தீபாவின் வேட்புமனுவில் கணவர் பெயர் இல்லை. மாதவன் தான் அவருடைய கணவர் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் கணவரின் பெயரையும், அவருடைய சொத்து மதிப்பையும் தீபா குறிப்பிடாதது ஏன்? இந்த வேட்புமனுவை நிராகரிக்காமல் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது ஏன் என மக்களின் கேள்விக்கு விடை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பொம்
4. பாஜக வேட்பாளர் கங்கை அமரன் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததை ரஜினி ஆதரவு பெற்ற வேட்பாளர் என பாஜக விளம்பரப்படுத்த, உடனே ரஜினி தான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று டுவிட்டரில் அறிவித்தார். பாஜகவுக்கு ஏன் இந்த வெட்டி விளம்பரம்?
5. பாஜக வேட்பாளர் கங்கை அமரனுக்கு அறிமுகமே தேவையில்லை. இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் அதற்கும் மேலாக இசைஞானியின் சகோதரர் என பல அடையாளம் இருக்க்கும் நிலையில், நாங்கள் எஸ்.சி இனத்தை சேர்ந்தவரை ஆர்.கே.நகரில் நிறுத்தியுள்ளோம் என்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஜாதிஅரசியலை ஒழிப்போம் என்று கூறி வரும் பாஜகவில் இப்படியும் ஒரு தலைவரா?
6. அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.77 கோடி ரூபாய் சொத்துமதிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆளுங்கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி ஒன்று தினகரன் ரூ.7 கோடி சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் விருதுபெற்ற தொலைக்காட்சியின் ஊடக தர்மம் இதுதானா?
7. சமீபத்தில் நடைபெற்ற உ.பி சட்டமன்ற தேர்தலை போலவே ஆர்.கே.நகர் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்தால் மட்டுமே முடியும். ஆனால் 85 பேர் இந்த தொகுதியில் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு முறைதான் ஆர்.கே.நகரில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.
8. சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த சேகர் ரெட்டியை ஓரிருநாள் கூட வெளியே இருக்க விடாமல் உடனே மீண்டும் வேறொரு வழக்கில் அவரை கைது செய்துள்ளது காவல்துறை. அவரிடம் இருந்து அதிமுகவின் ரகசியங்களை வெளிப்படுத்தி அதிமுகவை ஒரேயடியாக அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சிப்பதாகத்தான் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்,.

More News

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா எப்போது? பொதுப்பணி துறை அதிகாரிகள் தகவல்

சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது

கவுதம் மேனனின் அடுத்த படத்தில் விஷ்ணு-தமன்னா

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார்

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தொடர்ந்து பதவியில் இருந்தால் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் என திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன

'தளபதி 62' குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணையும் ரஜினி-விஜய்?

இந்தியாவின் மிக பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதியை உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ளது