ஜோசியம் சொன்னால் கடும் நடவடிக்கை. ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Friday,March 31 2017]

தேர்தல் என்று வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்று தான் காட்சி அளிக்கும். அதிலும் இடைத்தேர்தல் என்று வந்துவிட்டால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஊடகங்களுக்கு சரியான தீனியாக கருதப்படும் இந்த தேர்தலில் ஊடகங்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருப்பது கருத்துக்கணிப்புதான்.
தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் அதிக சதவீதம் ஓட்டு பெறுவார்கள் என்பதை நிபுணர்கள் மூலம் கணித்து கருத்துக்கணிப்பை வெளியிடுவதை ஊடகங்கள் ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்புகளால் மக்களின் மனநிலை மாற வாய்ப்பு இருப்பதால் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முன் 48 மணி நேரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்பது தொடர்பாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
ஆனால் தேர்தல் கணிப்புகளை ஊடகங்கள் மட்டுமின்றி ஒருசிலர் ஜோதிடர்களும் வேட்பாளர்களின் ராசியை கணக்கில் கொண்டு இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கூறி விளம்பரம் பெற்று கொள்ளும் தந்திரமும் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதற்கும் தற்போது தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தேர்தல் நேரத்தில் எந்தக்கட்சி ஜெயிக்கும், எந்தக் கட்சி தோற்கும் என்பது தொடர்பாக கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து கருத்துக் கணிப்பு வெளியிடுவது சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீறி கருத்துக்கணிப்பு வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் ஜோதிடர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர் திடீர் கைது: ஏன் தெரியுமா?

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: இப்போதாவது ஒப்புக்கொள்வார்களா?

சூப்பர் ஸ்டார் பட்டத்தை அஜித், விஜய் கைப்பற்ற நினைத்தாலே எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் கைப்பற்றினால் சும்மா இருப்பார்களா? சமீபத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் அவரை என்ன பாடு படுத்தியது என்பதை பார்த்தோம்

மலேசிய சுற்றுலா தூதர் பதவி உண்மையா? ரஜினி விளக்கம்

மலேசிய அதிபர் நஜீப் ரசாக் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பதை பார்த்தோம்.

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்

ஐந்து நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதம்பர் நஜீப் ரசாக் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்