ஆர்.கே.நகர் ரிலீஸ் எப்போது? வெங்கட்பிரபு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 20 2019]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் கடந்த சில மாதங்களாக காத்திருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் வெங்கட்பிரபு, 'ஆர்கே.நகர்' திரைப்படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,. மேலும் இந்த படம் ஏப்ரல் வெளியீடு என்ற வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் ஆரம்பிச்சு வச்சதை நானே முடிக்கிறேன்! ஐரா டிரைலர் விமர்சனம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

'காஞ்சனா 3' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 'காஞ்சனா 3' திரைப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ராதிகா!

அஜித் நடித்த காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம், அசல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரண், தற்போது 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, உள்பட பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன்

ரஜினிக்கு விமானம், நயன்தாராவுக்கு பஸ்: பிரமாண்ட விளம்பரங்கள்

ஒரு திரைப்படம் என்னதான் சூப்பராக உருவாக்கினாலும் இன்றைய விளம்பர உலகில் புரமோஷன் இல்லாமல் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட ஓடாது.