'தென்மாவட்டம்' இசையமைப்பாளர் சர்ச்சை.. ஆர்கே சுரேஷின் புதிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,March 06 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ’தென்மாவட்டம்’ என்ற திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போஸ்டர் வெளியானது. ஆனால் அந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த யுவன் சங்கர் ராஜா, இந்த படத்துக்கு தான் இசையமைக்கவில்லை என்றும் இதுவரை என்னிடம் யாரும் இசையமைக்க அணுகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு அடுத்த நாள் ஆர்கே சுரேஷ், ’யுவன் சங்கர் ராஜா நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளீர்கள், தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தானா? அல்லது வேறு யாராவது இசையமைப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் ஆர்கே சுரேஷ் அல்லது சமூக வலைதளத்தில் ’தென்மாவட்டம்’ திரைப்படத்தில் புதிய இசையமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கூறியதோடு இந்த பதிவில் யுவன் சங்கர் ராஜா சமூக வலைத்தள ஐடியையும் டேக் செய்துள்ளார்.

இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜா, ’தென்மாவட்டம்’ படத்தில் இசையமைக்க வில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஆர்கே சுரேஷ் கூறியிருந்தாரே, அது குறித்த ஆதாரங்களை அவர் வெளியிடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

மகா சிவராத்திரி தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

மகா சிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து ஒன்று காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

பாஜகவுடன் கூட்டணி வைத்த பிரபல தமிழ் நடிகரின் கட்சி.. வரவேற்பு தெரிவித்த அண்ணாமலை..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக பிரபல நடிகர் அறிவித்துள்ளதை அடுத்த அவருடைய கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பட வரலாற்றில் மிகப்பெரிய சாதனை.. ஓடிடி ரிலீஸ் மட்டும் இத்தனை கோடியா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அமரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு இந்த படம் ஓடிடி நிறுவனத்திற்கு

விஜய் சேதுபதி பாடிய காதல் பாட்டு.. அதுவும் 'மாஸ்டர்' நடிகருக்காக.. சூப்பர் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போதை வஸ்துகள் புழங்கும் தேசத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது: கமல்ஹாசன் ஆவேசம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுமையின் பிணம் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.