அஜித் ரசிகர் மன்ற தலைவராகும் ஆர்.கே.சுரேஷ்

  • IndiaGlitz, [Monday,December 26 2016]

'தாரை தப்பட்டை' படத்தில் கொடூர வில்லனாக நடித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தற்போது ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று 'பில்லா பாண்டி.

இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகர் மன்ற தலைவராக நடிக்கவுள்ளார். இதற்காக அவர் உண்மையான அஜித் ரசிகர் மன்ற தலைவர்களை சந்தித்து தனது கேரக்டருக்கு மெருகேற்ற முடிவு செய்துள்ளார். மேலும் அஜித்தின் உருவத்தை தனது உடம்பில் டாட்டூவாகவும் வரைய உள்ளாராம்.

இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறியபோது, ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் தனக்கு 20 ஆண்டு கால நண்பர் என்றும் அதன் மூலம் அஜித் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்று ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். இதன் காரணமாகவே அஜித் ரசிகராக இந்த படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 14 முதல் தொடங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆக்சன் காமெடி படமாக உருவாகவுள்ள 'பில்லா பாண்டி' படம் அஜித் ரசிகர்கள் உள்பட அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் ஆர்.கே.சுரேஷ் மேலும் கூறியுள்ளார்.

More News

தயார் நிலையில் 'பைரவா' டிரைலர். ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

போயஸ் கார்டனில் சசிகலா-ஸ்ரீதேவி சந்திப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தினமும் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரூ.100க்கு பதில் ரூ.500. வள்ளலாக வாரி வழங்கிய ஏடிஎம்

நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்.கள் இயங்காமல் முடங்கி இருக்கும் நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.100க்கு பதிலாக ரூ.500ஐ வள்ளல் போல் வாரி வழங்கியதால் ஒருசில நிமிடங்களில் ரூ.8 லட்சம் பறிபோனது.

இன்று முதல் ஆஸ்கர் வின்னரின் மேற்பார்வையில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த வாரங்களில் அதிமுக, திமுக பொதுக்குழு கூட்டங்கள்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளாக விளங்கி வரும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் பொதுக்குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.