'கனா' படத்திற்கு வீடியோ விமர்சனம் செய்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

ஒரு திரைப்படம் வெளியானவுடன் அந்த படத்தை விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருந்தால் நீங்களும் ஒரு விமர்சகர்தான், அந்த படத்திற்கு உங்கள் இஷ்டப்படி ஒரு ரேட்டிங் கொடுத்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஒருசிலர் பணம் பெற்றுக்கொண்டு படத்திற்கு ஆதரவாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் நெகட்டிவ் விமர்சனங்கள் தருவதையும் முழுநேர தொழிலாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்முறையாக பிரபல நடிகர் ஒருவர் விமர்சகராக மாறியுள்ளார். அவர்தான் ஆர்.கே.சுரேஷ். சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' படத்திற்கு ஆர்.கே.சுரேஷ் வீடியோ விமர்சனம் அளித்துள்ளார். 'கனா படத்தின் இயக்குனர் அருண்காமாராஜை தனக்கும் நீண்ட நாட்களாக தெரியும் என்றும் இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியிருப்பதாகவும் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த படம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரொம்ப மனசை தொட்ட படம் என்று கூறுவார்களே, அப்படி ஒரு படம் தான் 'கனா' என்றும், நானும் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் என்ற வகையில் ஒரு உண்மையான ஸ்போர்ட்ஸ்மேனுக்கு கிடைக்கும் கைதட்டலுக்கு இணையான மகிழ்ச்சி எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காது என்றும் கூறினார். இந்த படத்திற்கு கிடைத்த கைதட்டலும் அதுபோன்றதே என்றும், இந்த படம் எனது மனதை கவர்ந்த படம் என்றும் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

த்ரிஷாவுடன் காதலா? 'பாகுபலி' நடிகரின் ஓப்பன் டாக்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களில் 'பல்வாள்தேவன்' என்ற கேரக்டரில் நடித்த ராணா சமீபத்தில் கரண்ஜோஹர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி

முடிவுக்கு வந்தது அருள்நிதியின் அடுத்த படம்

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி, சரியான கதையை தேர்வு செய்து வெற்றி படங்களாக கொடுத்து வருவது தெரிந்ததே.

மீண்டும் ஒரு ஆணவக்கொலை: மகளை சாம்பலாக்கி நீரில் கரைத்த கொடூர பெற்றோர்

உடுமலையில் கவுசல்யாவின் கணவர் சங்கர், தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணாய் என அவ்வப்போது ஆணவக்கொலைகள் நடந்து கொண்டிருப்பது நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது.

டிரிம் செய்யப்பட்ட சீதக்காதி: புதிய ரன்னிங் டைம் அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான 'சீதக்காதி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பும், பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது

கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: ரஜினியை கலாய்த்த பெட்டிக்கடைக்காரர்

ஒருசில கடைகளில் கடன் கிடையாது என்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக அதே நேரத்தில் சுவாரஸ்யமாக அறிவிப்பு பலகை மூலம் கூறுவதுண்டு.