சென்னை அண்ணா சாலையில் சற்றுமுன் மீண்டும் விரிசல். போக்குவரத்து பாதிப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

சென்னை அண்ணா சாலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி, அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தபித்திருந்த நிலையில் சில நிமிடங்களுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதே பகுதியில் அடிக்கடி பள்ளம் மற்றும் விரிசல் ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட பள்ளம் நேற்று சரிசெய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட விரிசலின் வழியாக வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இந்த விரிசலை சரிசெய்யும் பணியை இன்னும் சற்று நேரத்தில் மாகராட்சி மற்றும் மெட்ரோ ஊழியர்கள் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கூறியபோது, ' ஒரு மணி நேரத்தில் விரிசல் சரி செய்யப்படும். விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்று கூறினார்.

More News

ரிலீசுக்கு முன்பே அமீர்கான் பட சாதனையை உடைத்த 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 6500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய திரைப்படமும், இத்தனை தியேட்டர்களில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

மீண்டும் அஜித்துக்கு வில்லனாக மாறிய 'வேதாளம்' புகழ் கபீர்சிங்

கோலிவுட் ரசிகர்களுக்கு கபீர்சிங் என்ற நடிகர் ஒருவர் இருக்கின்றார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில் அஜித்தின் 'வேதாளம்' என்ற ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட நடிகராக மாறிவிட்டார்...

டெல்லியில் மத்திய அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனதுக்கு தோன்றிய, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்...

சசிகலாவை அடுத்து சிறைக்கு செல்லும் தமிழக தலைவர் இவர்தான். சுப்பிரமணியன் சுவாமி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு செல்ல காரணமான வழக்கை பதிவு செய்தவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

ஈரான் இயக்குனரின் படத்தில் தென்னிந்திய நடிகை

உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மஜித்மஜிதி குறித்து சினிமா ரசிகர்கள் தெரிந்திராமல் இருந்திருக்க முடியாது.