கொள்ளையனை சிக்கவைத்த இருசக்கர வாகனம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தாய்லாந்தில் உடோன் தானி மாவட்டத்தில் நூடுல்ஸ் விற்கும் பெண்மணியிடன் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி பணத்தைப் பறித்த திருடன், இருசக்கர வாகனம் செய்த சதியால் உள்ளூர் மக்களிடம் சிக்கி காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டான்.
மே 12, பிற்பகல் 2:30 மணிக்கு, உடோன் தானி மாவட்டத்தின் பான் நோங் வேங்கில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடையில் கொள்ளை நடந்ததாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது. சம்பவத்தில் துப்பாக்கியை காட்டி பணத்தைக் கொள்ளையடித்த நான்தவாத் சனாசாய் என்ற நபர் பிடிபட்ட விதம் சுவாரஸ்யமானது.
69 வயதான பூன்ஸக் என்ற பெண்மணியின் கடையில் நுழைந்த சனாசாய், நூடுல்ஸ் ஆர்டர் செய்கிறான். நூடுல்ஸ் தயாரிக்கும் போதே பூன்ஸக்கின் முன் துப்பாக்கியை நீட்டி அவரிடமிருந்த 700 பாட்டு களைப் ( சுமார் 1700 ரூ) பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். பணத்தைப் பறி கொடுத்த பூன்ஸக் கூச்சலிட, அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்த 23 வயது முன்னாள் ராணுவ வீரரான அனுவத் ஸ்ரீ என்பவர் தப்பியோடும் திருடனை பின் தொடர்கிறார். அவன் கையிலிருந்த துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியும், பாதுகாப்பான தூரத்தில் அவனை பின் தொடர்கிறார். திருடனுக்குப் போதாத காலம்! வாகனத்தில் எரிபொருள் தீர்ந்து நின்று போக முன்னாள் வீரர் பாய்ந்து திருடனை மடக்கிப் பிடித்து, காவலர்களிடம் ஒப்படைக்கிறார். பறிமுதல் செய்யப் பட்ட துப்பாக்கி, பொம்மைத் துப்பாக்கி என தெரிய வருகிறது.
விசாரணையின் போது, திருடன் சனாசாய் திருடும் நோக்கத்துடன் தான் இருமுறை அந்த பகுதியை நோட்டமிட்டதாகவும், இந்த கடையில் வயதான பெண்மணி தனியாக இருப்பதால், அங்கு திருட முடிவு செய்ததாகவும் கூறினார். கடன்சுமை காரணமாகத் தான் இந்த முடிவுக்கு வந்ததாக கூறிய இவர், தனக்கு சூதாடும் பழக்கம் இருப்பதா கவும், அது குறித்து தனது பெற்றோருக்குத் தெரியாது என்றும் வருத்தத்துடன் கூறினார்.
இந்த செய்தி அறியும் முன், தமது மகன் குடும்ப பாரத்தை உணர்ந்து பெற்றோருக்கு மிகவும் உதவி செய்யக் கூடியவன் என்று பெருமை யுடன் கூறிய அவரது தந்தை, செய்தி அறிந்த பின், அவனுடைய பழக்கவழக்கங்கள் தங்களுக்குத் தெரியாது என வேதனையுடன் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com