close
Choose your channels

ஜெயிலிலும் ஒன்றாகவே ராபர்ட்-ரக்சிதா: வீடியோ வைரல்

Friday, November 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் சிறைக்கு அனுப்பப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் டாஸ்க் வழங்கப்படும் என்பதும் அந்த டாஸ்க்கில் நன்றாக விளையாடியவர் அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்து விடுவார் என்பதும் அதேபோல் சரியாக விளையாடாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வார அரண்மனை டாஸ்க்கில் சரியாக விளையாடாத இரண்டு நபர்களை தேர்வு செய்ய பிக்பாஸ் கூறுகிறார். இதனை அடுத்து போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ராபர்ட் மற்றும் ரக்சிதாவை தேர்வு செய்தனர்.

இதனையடுத்து ராபர்ட், ரக்சிதா ஆகிய இருவரும் சிறைக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட, இருவரும் சிறையில் அடைக்கப்படும் காட்சிகள் உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அரண்மனை டாஸ்க்கில் ரக்சிதா மீது ராபர்ட் மனவருத்தம் அடைந்த நிலையில் இருவரும் ஒன்றாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மன வருத்தம் சரியாகுமா? அல்லது அதிகமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.