ஓப்பனாக ராபர்ட் மாஸ்டர் கேட்ட கேள்வி.. ரக்சிதாவை காப்பாற்றிய கமல்ஹாசன்!

ராபர்ட் மாஸ்டர் தனது மனதில் இருப்பதை ஓப்பனாக ரக்சிதாவில் கேள்வி கேட்ட நிலையில் அந்த கேள்விக்கு பதில் சொல்ல ரக்ஷிதா திணறிக்கொண்டிருக்கும் போது கமல்ஹாசன் காப்பாற்றிய வீடியோ சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஒரு போட்டியாளர் இன்னொரு போட்டியாளரிடம் கேள்வி கேட்கும் டாஸ்க் கமல்ஹாசன் முன்வைக்கப்படுகிறது. இதில் விளையாடும் போட்டியாளர்கள் தங்களது எதிரே உள்ளவர்களிடம் கேள்வி கேட்க அதற்கு அவர்கள் பதில் கூறி வருகின்றனர்.

அவ்வாறு ராபர்ட் மாஸ்டர் முன் ரக்சிதா உட்கார்ந்து இருக்கும் நிலையில், ‘ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் உங்ககிட்ட ஏதோ சொல்ல வரார் என்பது உங்களுக்கு தெரிகிறதா? என்று ராபர்ட் மாஸ்டரே கேட்டார். இந்த கேள்வியால் அதிர்ச்சி அடைந்த ரக்சிதா பதில் சொல்ல திணறிவரும் நிலையில் கமலஹாசன் பஸ்ஸரை அழுத்தி அந்த உரையாடலை நிறுத்தினார். இதனை அடுத்து கமல்ஹாசனிடம் மிகவும் நன்றி என ரக்சிதா கூறினார்.

முன்னதாக அசீம் தனலட்சுமியிடம், ‘நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டபோது அதற்கு தனலட்சுமி, ‘இருக்கு ஆனா இல்லை’ என்று எப்போதும்போல் ஒரு குழப்பமான பதிலை கூறுகிறார்.

கோபம் அதிகமாக வரும் போது பொருட்களை உடைக்கிறீர்களே என ஜனனியிடம் ராம் கேட்க, ‘அதிக கோபம் வந்தால் உடைத்து விடுகிறேன்’ என்று கூறும்போது கோபம் வந்தால் எல்லாத்தையும் உடைப்பீர்களா? என்று ராம் கேட்கிறார்.

இதனை அடுத்து ஷிவின் ஆயிஷாவிடம், நான் ரொம்ப மன உறுதியான ஒரு ஆயிஷாவை வந்த புதிதில் பார்த்தேன், அது தொடர்கிறதா? என்று கேட்டபோது ’இல்லை, முடியல, நான் தோத்துட்டேன்’ என்று கூறுகிறார்.
 

More News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த அடுத்தடுத்த ஷாக்.. விஷ்ணுவிஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'லால் சலாம்' என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே.

டி 20 உலகக்கோப்பை போட்டிக்கு பின் பிரபல கிரிக்கெட் வீரர் பாலியல் வழக்கில் கைது!

பாலியல் புகார் காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அதை சொல்ல நீங்க யாரு? தனலட்சுமியை லெஃப்ட் ரைட் வாங்கிய கமல்ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமியை கமல்ஹாசன் கடந்த வாரம் பாராட்டி நிலையில் இந்த வாரம் லெஃப்ட் ரைட் வாங்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது 

கல்கியின் வீடு தேடி சென்ற லைகா சுபாஷ்கரன்.. என்ன கொடுத்தார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை

கட்டுமல்லி கட்டிவச்சா, வட்ட கருப்பு பொட்டு வச்சா.. விஜய் பாடிய 'வாரிசு' பாடல்

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் சிங்கிள் பாடலான 'ரஞ்சிதமே' என்ற பாடல் இன்று மாலை 5.30  மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி .