'தளபதி 63' படத்தில் பிரபல நடிகரின் மகள்!

  • IndiaGlitz, [Sunday,January 13 2019]

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வரும் இயக்குனர் அட்லி, இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகர்களை தேர்வு செய்யும் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். நேற்று இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' புகழ் கதிர் இணைந்த அதிகாரபூர்வ செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் 'தளபதி 63' படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோசங்கரின் மகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ரோபோசங்கரின் மகள் விளையாட்டு வீராங்கனையாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்

பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி, 'மெர்க்குரி', மற்றும் ;லட்சுமி ' ஆகிய மூன்று படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் 6 படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினி-கமல் எனது நண்பர்கள் இல்லை! பிரபல நடிகர் பேட்டி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் தனது சக நடிகர்கள் மட்டுமே என்றும், நண்பர்கள் இல்லை என நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

என்.ஜி.கே படப்பிடிப்பு நிறைவு: சூர்யாவுக்கு நன்றி சொன்ன இயக்குனர்

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்: 17 வயது இளம்பெண்ணால் ஏற்பட்ட விபத்து

கடந்த சில ஆண்டுகளாக விபரீதமான சேலஞ்சுகள் உலகம் முழுவதும் வைரலாகி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போதும் அதேபோன்று 'பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்' என்ற ஆபத்தான சேலஞ்ச் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கடவுளை கண்டுபிடித்த யோகிபாபு

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் யோகிபாபு. விஜய் உள்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.