close
Choose your channels

ரஜினியை கலாய்த்த ரோபோ சங்கர் படக்குழுவினர்?

Friday, March 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த சில தகவல்களை வெளிப்படையாக கூறினார். அவரது சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டத்தையும் கொடுத்தது. அரசியலில் இருந்து ரஜினி ஜகா வாங்கிவிட்டதாகவும், போரில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரோபோசங்கர், வீரா, மாளவிகா நாயர் உள்பட பலர் நடித்து முடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா’ படகுழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் உள்ள வாசகங்கள் ரஜினியை கலாய்க்கும் வகையில் இருப்பதாக ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

’வருவது உறுதி’, ‘வந்துகிட்டே இருக்கேன்’, ‘வந்துட்டேன் ஆனால் நான் இல்லை’ ஆகிய வாசகங்கள் இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் உள்ளது. இதில் உள்ளவை ரஜினியை கலாய்க்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos