close
Choose your channels

ரோஹித் சர்மா ரிலீஸ் செய்த ஃபர்ஸ்ட்லுக்: இணையத்தில் வைரல்

Friday, January 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித்சர்மாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்ததால் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி மகளை பார்க்க நாடு திரும்பினார்.

இந்த நிலையில் அவர் தனது செல்ல மகளின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெரியவில்லை. இருப்பினும் குழந்தையின் பிஞ்சு விரல்கள் ரோஹித் சர்மாவின் விரலை பிடித்தவாறு இருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த 2019ஆம் ஆண்டு தனக்கு சிறப்பான தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளதாக ரோஹித் சர்மா பதிவு செய்துள்ள இந்த டுவீட் பதிவு செய்த சில மணி நேரங்களில் 83 ஆயிரம் லைக்ஸ்களுக்கும் மேல் அள்ளியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.