மாறுவேடத்தில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் ரோஜா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,December 22 2023]

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநில அமைச்சராக இருக்கிறார் என்பதும் அவர் ஆந்திராவின் மிகச்சிறந்த அமைச்சர்களின் ஒருவராக விளங்கி வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏழை மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு கிறிஸ்மஸ் தாத்தா போல் வேடமணிந்து, அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ரோஜா இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் என்பதும் தற்போது அவர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நாகராஜ் என்ற மாற்று திறனாளி தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மனுவாக எழுதி ரோஜாவிடம் கொடுத்த போது ’கண்டிப்பாக எங்கள் குழு உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் நாகராஜ் ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவருடைய வீட்டிற்கு கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் சென்ற அமைச்சர் ரோஜா, அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் நாகராஜுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.

இந்த நிலையில் நாகராஜை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டுமின்றி அவருடைய மருத்துவச் செலவிற்கு ரூ.2 லட்சம் பண உதவி செய்ததாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு.. முக்கிய கேரக்டரில் 'பீஸ்ட்' நாயகி..!

 பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் தயாரிக்க இருக்கும் நிலையில் அதில் முக்கிய கேரக்டரில் 'பீஸ்ட்' படத்தில் நடித்த நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக

இந்த ஒரு வீடியோ விக்ரம் எவிக்சனை மாற்றுமா? வெளியேற்றத்தை தடுக்குமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விக்ரம், ரவீனா மற்றும் விசித்ரா ஆகிய மூன்று பேர்கள் மட்டுமே நாமினேஷனில் உள்ள நிலையில்  தற்போது வந்துள்ள தகவலின்படி விக்ரம் தான் குறைவான

சிறகடிக்க ஆசை: முத்து-மீனாவை வெளியேற்ற திட்டம்.. விஜயா சதியை முறியடிப்பாரா அண்ணாமலை?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறைந்த நாட்களிலேயே இந்த சீரியல் மக்கள் மனதை கவர்ந்து விட்டது என்பதையும்

திடீரென கதறியழும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் தனம்.. என்ன ஆச்சு?

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறியழும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

உங்க வீட்ல இருந்து வந்தவங்க ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க.. மனமுடைந்து பேசிய போட்டியாளர்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் கலகலப்பாக இருந்தது என்பதும் ஒரு சில போட்டியாளர்களின் உறவினர்கள் மட்டும் சில பிரச்சனைகளை எழுப்பினார்கள் என்பதை பார்த்தோம்.