'ரோஜா' மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? ஹீரோயினியாக நடிப்பாரா?

  • IndiaGlitz, [Sunday,August 01 2021]

’ஜென்டில்மேன்’ ’ரோஜா’ உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகை மதுபாலா தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கே பாலச்சந்தர் இயக்கிய ’அழகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. அதன்பின் ’வானமே எல்லை’ ’ரோஜா’ ’ஜென்டில்மேன்’ ’செந்தமிழ்செல்வன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அதேபோல் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மதுபாலா கடந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அமயா மற்றும் கெயா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் மதுபாலா, சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, மகளை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’ரோஜா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் கண்டிப்பாக இவரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்றும் அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார் என்றும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

மீண்டும் ஆன்மீக சுற்றுப்பயணமா? சிம்புவின் வைரல் புகைப்படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சபரிமலை, காசி, உள்பட ஒரு பெரிய ஆன்மீக சுற்றுலா வந்து சென்று வந்தார் என்றும் அதனை அடுத்து அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு

உண்மையில் என்ன நடந்தது: ரம்யாகிருஷ்ணன் - வனிதா மோதல் குறித்து நகுல்!

பிக்பாஸ் ஜோடி இந்நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உண்மையில் அன்றைய நிகழ்ச்சியில் என்ன நடந்தது

ரஜினியை அடுத்து களத்தில் இறங்கிய மீனா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது

'நெற்றிக்கண்' இயக்குனரின் அடுத்த படத்தில் சமீபத்தில் ஹிட் கொடுத்த ஹீரோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது என்பதும் டிரைலருக்கு பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட்

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் அனிருத்: 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 'நட்பு' பாடல் ரிலீஸ்

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இந்த படத்தின் பாடல் ஆகஸ்டு 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக