'ரோஜா' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான ’ரோஜா’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ’ரோஜா’ என்பதும் இந்த சீரியல் லட்சக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஷாமிலி. இவரது வில்லத்தனமான நடிப்பு மிக அருமை என்றும், இவரது கேரக்டருக்கு கிடைக்கும் திட்டுக்களே இவரது அபார நடிப்புக்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் ஆன நடிகை ஷாமிலி ’ரோஜா’ தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார். இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ’இளவரசி’ பிறந்து இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


More News

கவுதம் மேனனுடன் இணைந்த சிவகார்த்திகேயன்: வீடியோ வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த மியூசிக் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'கவின்' நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கவின் நடித்த 'லிப்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கிடைத்த பெருமைக்குரிய பட்டம்: வைரல் புகைப்படங்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், 'விருமன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கி வருகிறார்

இந்த வாரம் எலிமினேஷன் ஆனவர் இவரா? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

44 நாட்களுக்கு இப்படித்தான்… இந்திய வீரர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட பிசிசிஐ!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் வெற்றிப்பெற்ற இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவிற்கு