close
Choose your channels

பந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ!!!

Monday, November 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ!!!

 

சுவீடனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட ஒரு வீரரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கிய அந்த வீரர் அத்தனை பெரிய தீயிலும் காரை இரண்டாகப் பிய்த்துக் கொண்டு பத்திரமாக வெளியே வந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வீரரின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பஹ்ரைன் கிரான் பிரிக்லிக் பார்முலா ஒன் கார் பந்தயம் நேற்று சுவீனடனில் நடைபெற்றது. இந்தப் போட்டி தொடங்கியவுடன் அனைத்து நாட்டு வீரர்களின் கார்களும் சீறிப் பாயத் தொடங்கின. அப்படி பிரான்ஸ் வீரராகக் கலந்து கொண்ட ரோமைன் க்ரேஸ்ஜீன் என்பவரின் கார் தீடிரென சாலைக்கு நடுவே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென பற்றி ஒட்டுமொத்த காரும் சேதம் அடைந்து விட்டது என நினைக்கும்போது அந்தக் காரில் இருந்த க்ரேஸ்ஜீன் காரை இரண்டாகப் பிளந்து கொண்டு வெளியே வந்தார்.

போட்டி நடக்கும் இடத்தில் இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் கடும் பீதி அடைந்தனர். அதைத் தொடர்ந்து போட்டி ரத்தும் செய்யப்பட்டது. இந்நிலையில் விபத்துக்கு உள்ளான கார் முற்றிலும் சேதம் அடைந்ததாகத் தகவல் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய க்ரேஸ்ஜீன் சிறிய தீ காயங்களுடன் உயிர் தப்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.