close
Choose your channels

ராஜ் மோகன் இயக்கத்தில் உருவாகும் “பாபா பிளாக் ஷீப்”: பூஜை புகைப்படங்கள்

Monday, December 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்" படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்" படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மாதவன் கலை இயக்கத்தில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில், ஸ்டன்னர் சாம் சண்டைப்பயிற்சியில் உருவாகும் இந்த படம் 2023ம் ஆண்டு கோடை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.