இளையராஜா பிறந்த நாளை கெளரவப்படுத்தும் சிம்பு படக்குழு

  • IndiaGlitz, [Tuesday,May 30 2017]

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் வரும் ஜூன் 2ஆம் தேதி வருகிறது. அவரது பிறந்த நாளை இந்த ஆண்டு வித்தியாசமாக கொண்டாடும் வகையில் சிம்பு நடித்து வரும் 'AAA' படத்தின் ஒரு பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். 'ரோட்டுல வண்டி வருது' என்று தொடங்கும் ஆன்மீக பாடலான இந்த பாடலை வரும் ஜூன் 2ஆம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளை கெளரவப்படுத்தும் வகையில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அஸ்வின் தாத்தா கேரக்டருக்காக உருவாக்கப்பட்ட இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடலை இளையராஜா பாடியதற்காக சிம்பு மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். மேலும் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் மற்ற பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி அதிரடி நீக்கம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றின் மூலம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது...

சங்கமித்ராவில் இருந்து திடீரென விலகிய ஸ்ருதிஹாசன்! காரணம் இதுதான்

'பாகுபலி 2' படத்தை அடுத்து தென்னிந்திய திரையுலகில் தயாராகும் இன்னொரு பிரமாண்டமான சரித்திர திரைப்படமான 'சங்கமித்ரா' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் அறிவிக்கப்பட்டது...

சென்னையில் மாடல் அழகி திடீர் மாயம்.

டெல்லியை சேர்ந்த கானம் நாயர் என்ற மாடல் அழகி மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் சென்னையில் பணிநிமித்தம் கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வருகிறார்

சிபிஐ நயன், 6 கொலைகள், விஜய்சேதுபதி: இமாலய எதிர்பார்ப்பில் இமைக்கா நொடிகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றும் அந்த படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி கொண்டே வருகின்றது.

'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய் ஏற்படுத்திய ஆச்சர்யம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், சிக்ஸ்பேக், ரிஸ்கான, டூப் இல்லாத சண்டைக்காட்சிகள் ஆகியவற்றுக்காக மிகுந்த சிரத்தை எடுத்துள்ளதாக அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.