close
Choose your channels

தனுஷ் பாடலுடன் 'நாட்டு நாட்டு' பாடலை ஒப்பிட்ட எம்.எம்.கீரவாணி: எந்த பாடல் தெரியுமா?

Wednesday, March 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் எம்எம் கீரவானி அவர்கள் ஆஸ்கர் விருது பெற்ற ’ நாட்டு நாட்டு’ பாடலை தனுஷ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுடன் ஒப்பிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’3’ என்ற படத்தில் இடம் பெற்ற ’ஒய் திஸ் கொலைவெறி’ என்ற பாடலுடன்’ நாட்டு நாட்டு’ பாடலை எம்எம் கீரவானி அந்த பேட்டியில் ஒப்பிட்டார்.

’ஒய் திஸ் கொலைவெறி’ போலவே இந்த பாடலின் வரிகளும் சிறப்பாக, எளிமையாக அமைந்தது என்றும் அதற்காக பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் நடன இயக்குனருக்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

'ஒய் திஸ் கொலைவெறி’ பாடலை தனுஷ் எழுதி பாடியிருப்பார் என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது என்ற பாடலை தனுஷின் ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடலுடன் இசையமைப்பாளர் எம்எம் கீரவானி ஒப்பிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.