close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்': அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் குறித்த மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பதும் இன்று அஜய்தேவ் கானுக்கு பிறந்தநாளை எடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கான், சமுத்திரகனி, ஆலியா பட், ஒலிவியா மோரீஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். விஜயேந்திர பிரசாத் கதையில் செந்தில்குமார் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.