close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவின் ஒத்திவைப்பு அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments

இந்தியாவின் பிரமாண்ட படைப்புகளில் ஒன்றான ‘ஆர்.ஆர்.ஆர். படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் ஜனவரி 8ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீசுக்கு தேவையான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர். படத்தின் டிரைலர் ஜனவரி டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது திடீரென எதிர்பாராத காரணத்தினால் டிரைலர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை மறுநாள் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz