close
Choose your channels

'வலிமை' மோதலை தவிர்க்க 'ஆர்.ஆர்.ஆர். படக்குழு போட்ட திட்டம்!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவான ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பொங்கல் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அதே பொங்கல் தினத்தில் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படம் வெளியாகும் என செய்திகள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் தென்னிந்தியாவில் உள்ள இரண்டு பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் எந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்த நிலையில் ’வலிமை’ மோதலை தவிர்ப்பதற்காக ‘ஆர்.ஆர்.ஆர். படக்குழு அந்த படத்தை ஜனவரி 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. ஜனவரி 8ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் ஜனவரி 14ஆம் தேதி ’வலிமை’ படமும் வெளியானால் இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.