அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Friday,September 13 2019]

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் சரக்கு லாரி ஒன்றுக்கு ரூபாய் 2 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்றை போலீசார் மடக்கினர். இதனையடுத்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிகபாரம் ஏற்றி வந்ததோடு லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களும் முறைப்படி டிரைவரிடம் இல்லை. இதனையடுத்து ரூபாய் 2 லட்சத்து 500 அபராத தொகையுடன் கூடிய செலான் டிரைவரிடம் கொடுக்கப்பட்டது.

இந்த தொகையை பார்த்ததும் லாரி டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இந்த அபராத தொகை குறித்து லாரி உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகை அதிகம் என்பதால் தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு டெல்லி சாலை போக்குவரத்து துறையினர் லாரி உரிமையாளரை அறிவுறுத்தினார். மேலும் நீதிமன்றத்தில் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்தால் அபராதத் தொகை குறைக்கப்படலாம் என்றும் லாரி உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதத்தொகை அதிகம் என்றாலும் இன்னும் ஒருசில நாட்களில் சாலைகளில் ஓடும் 100% வாகன ஓட்டிகளிடமும் சரியான ஆவணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கவின் கன்னத்தில் விழுந்த பளார் அறை! லாஸ்லியா அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது

லான்சன் டொயோட்டா பொதுமேலாளரின் மனைவி சென்னையில் தற்கொலை!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. ஓலா, உபேர் வருகையும் மெட்ரோ ரயிலுமே

தலைவரிடம் இருந்து சர்ப்ரைஸ் வீடியோகால்: நடிகையின் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'தர்பார்' படத்தின் மும்பை படப்பிடிப்பில் கடந்த சில வாரங்களாக இருந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார்.

'தல' ஓய்வு முடிவு அறிவிப்பா? இன்று இரவு பிரஸ்மீட்

இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியிலிருந்து தல தோனி ஒய்வுபெற்ற

பிக்பாஸில் கேம் மட்டும் தான் விளையாடணுமா? பிரபல இயக்குனர் கேள்வி!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் ஒரு கருத்து 'இங்கே வந்த வேலையை மட்டும் பார்க்கணும், கேம் மட்டும்தான் விளையாடணும். அழக்கூடாது