சிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்!!!

  • IndiaGlitz, [Monday,November 30 2020]

 

ஆயிரம் தானங்களிலும் சிறந்த தானம், கல்வி தானம் எனப் பொதுவாக கூறப்படுவது உண்டு. காரணம் எந்த இக்கட்டான சூழலிலும் ஒருவரின் கல்வி அறிவு மட்டும் அவரை விட்டு போகவே போகாது. அப்படியான கல்வி அறிவை ஏழை மக்கள் இலவசமாக பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கோவையைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிப்பாளையம் எனும் பகுதியில் கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பள்ளி தற்போது நடுநிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அடுத்து உயர்நிலை படிப்பை தொடர வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்ல வேண்டும். எனவே இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பள்ளியை விரிவுப்படுத்த போதுமான இடவசதி இல்லை என அதிகாரிகள் பதில் அளித்து உள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள நிலத்தின் சொந்தக்காரரான ராமமூர்த்தி என்பவரின் அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்ற ராமமூர்த்தி 3 கோடி ரூபாய் சொத்து என்றுகூட யோசிக்காமல் தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்தை உடனே பள்ளி நிர்வாகத்திற்கு கொடுத்து விட்டார். இதனால் நடுநிலைப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக மாறப்போகிறது. உள்ளூரிலேயே குழந்தைகள் 12 ஆம் வகுப்பு வரை படிக்க முடியும். இந்நிலையில் சிறிதும் யோசிக்காமல் தனது நிலத்தை கொடுத்து உதவிய வள்ளல் ராமமூர்த்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

பந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ!!!

சுவீடனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட ஒரு வீரரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பொறுத்திருங்கள் நான் முடிவெடுக்கின்றேன்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

பிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா!

நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி ஹீரோ அவதாரம் எடுக்கும் நிலையில் அவருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்து உள்ளனர் 

டெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும்

மெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதை அடுத்து தமிழகத்தில் டிச.31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என  தமிழக அரசு அறிவித்துள்ளது