'விடுதலை' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துவரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அதில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டண்ட் நடிகர் சுரேஷ் என்பவர் காலமானதை அடுத்து தயாரிப்பு நிறுவனம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’விடுதலை’ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் காலமானது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ’விடுதலை’ படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியை ஒன்று எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் காலமானார் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படப்பிடிப்பில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தும் சுரேஷை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் எங்களை விட்டுச் சென்றது மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் எங்களது இதயங்களில் மாறாத வலியாக இன்று இருக்கும் என்றும் மறைந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

கல்வியாளர் A.N. இராதாகிருஷ்ணன் இயற்கை எய்தினார்!

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான திரு. A.N. இராதாகிருஷ்ணன்

நேற்று வெளியேறிய குயின்ஸிக்கு லட்சக்கணக்கில் சம்பளமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட குயின்ஸிக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தளபதி 67' பூஜை. விஜய், லோகேஷ் கலந்து கொண்டதாக தகவல்!

விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' என்ற படத்தின் பூஜை

இந்த வார நாமினேஷன்.. 3 போட்டியாளர்கள் குறிவைக்கப்பட்டார்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் பட்டியல் வெளியாகும் என்பது தெரிந்ததே. 

தலைமை செயலகம் நோக்கி செல்லும் இயக்குனர் அமீர்.. வைரலாகும் புகைப்படம்

 தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் அமீர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு 'உயிர் தமிழுக்கு' என்ற டைட்டில்