அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழக மக்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் இருக்கும் நிலையில் தற்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். ரூ.1000 மட்டுமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் வேலையின்றி வருமானம் இன்றி உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடைபாதை வியாரிபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ. 1000 மற்றும் கூடுதலாக ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், கட்டட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 1000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்வர், துணை முதல்வரை சந்தித்த நடிகர் யோகிபாபு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி!

இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு “லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது“- WHO அறிவுறுத்தல்

“ஊரடங்கு எனப்படும் லாக்டவுனை மட்டும் அறிவித்துவிடுவது கொரோனா பரவலுக்கு முழுமையான தீர்வாகாது“ என உலக சுகாதார அமைப்பின் அவசரகால

ஆண்டவனே உங்க பக்கம்தான்: ரஜினியை வாழ்த்திய மூன்று பிரபலங்கள்

உலகமே கொரோனா அச்சுறுத்தலில் பரபரப்பாக இருந்தாலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பட்ட போது

மதுரை நபரை மர்மமாக தாக்கிய கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

உலகிலுள்ள மனித இனத்தையே கடந்த சில மாதங்களாக ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது