close
Choose your channels

ஒரே வாரத்தில் ரூ.13,700 கோடி வசூல் செய்த திரைப்படம்: திரையுலகினர் ஆச்சரியம்..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட் திரைப்படமான ’ஜான்விக் 4’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 13 ஆயிரத்து 700 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ’ஜான்விக்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இந்த படத்தின் நான்காம் பாகம் வெளியானது என்பதும் கீயானு ரீவ்ஸ் இந்த படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான அதிரடி ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் வசூல் அளவிலும் சாதனை செய்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 617 கோடியும் இந்தியாவில் மட்டும் 20 கோடியும் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் முதல் வார முடிவில் இந்த படம் உலக அளவில் 13 ஆயிரத்து 700 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இது அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வசூல் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன் வெளியான ’ஜான்விக்’ மூன்று பாகங்களின் வசூலை இந்த படத்தின் நான்காம் பாகம் முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.