close
Choose your channels

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டதா?

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்து விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோர்கள் தங்களது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றிருந்த நிலையில் அங்கு கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால் இது குறித்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய பெற்றோர் அதிகாரப்பூர்வ தகவல்களை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கீர்த்தி சுரேஷ் குறித்த திருமண வதந்தி உண்மையாகுமா? அல்லது மறுப்பு தெரிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் கேரள தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியானது என்பதும் அந்த செய்திக்கு கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியின் ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அவர் ‘சைரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.