close
Choose your channels

ஒரே வாரத்தில் அடுத்த படம்.. 'ரன் பேபி ரன்' இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி நடித்த ’ரன் பேபி ரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளன.

ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ’ரன் பேபி ரன்’. திரில் கதைய அம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும் வசூலிலும் திருப்திகரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான இந்த படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான நிலையில், வெளியாகி ஒரே வாரத்தில் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘ரன் பேபி ரன்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பல வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களே ஆண்டுக்கணக்கில் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் நிலையில் ஒரே வாரத்தில் ’ரன் பேபி ரன்’ இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.