பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மனிதன்? பகீர் ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே பறவைகளை குறி வைத்துத் தாக்கும் ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (H5N8) பரவி வருகிறது. 7 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்ட இந்த வைரஸை மாநில அரசுகள் மிகக் கடுமையாகப் போராடி கட்டுப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பறவைகளை குறி வைத்துத் தாக்கும் ஏவியன் இன்ஃப்ளுயன்சா வைரஸ் (H5N8) முதன் முதலாக ரஷ்யாவில் ஒரு மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய H5N8 வைரஸால் இதுவரை எந்த மனிதர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவைத் தவிர ஐரோப்பா, ரஷ்யா, சீனா மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதிகளில் (H5N8) இந்த வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ்களின் மரபணுவைக் கொண்டு இருக்கின்ற (H1N1), (H7N9), (H9N2) போன்ற வைரஸ்கள் அங்கு மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி வருவதாகவும் உலகச்சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் முதல் முறையாக ரஷ்யாவில் ஏவியன் இன்ப்ஃளூயன்ஸா வைரஸின் மரபணுவைக் கொண்டு இருக்கும் A(H5N8) எனும் வைரஸால் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் பறவைக் காய்ச்சலால் மேலும் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்து உலகச் சுகாதார அமைப்பின் கண்காணிப்புக் குழுத் தலைவர் அன்னா போபோவா, (H5N8) வைரஸால் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளார் எனினும் ரஷ்யாவில் இந்த வைரஸ் மேலும் பரவுவதற்கான அறிகுறி இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதேபோல கடந்த 1918 ஆம் ஆண்டுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய H5N1 இந்த வைரஸும் ஏவியன் இன்ப்ஃப்ளூயன்ஸா வைரஸின் மரபணு கொண்டது. சமீபத்தில் கடந்த 1997 இல் (H5N1) எனும் இதே வைரஸால் ஹாங்காங்கில் 18 மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அதில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தேசிய அளவில் டிரெண்டான அட்லி: விஜய் காரணமா?

இன்று காலை முதல் டுவிட்டரில் திடீரென அட்லியின் பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது

கமல் போட்டியிட போகும் தொகுதி எது?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரும் தேர்தலில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்

ராதிகாவின் 'சித்தி' கேரக்டரில் நடிக்கும் சித்தி மகள்?

நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

என்னை இமயத்தின் உச்சியில் உட்கார வைத்துவிட்டார்: மாரி செல்வராஜ் குறித்து மாரியம்மாள்!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடலை பாடிய மாரியம்மாள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மாரி செல்வராஜ் அவர்கள் என்னை

முதல்வர் விழாவில் புளிசாதம் சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம்!

விராலிமலை அருகே தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்று அங்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது