close
Choose your channels

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளியில் ஷுட்டிங் நடத்தும் படக்குழு!

Wednesday, October 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஷ்யாவைச் சேர்ந்த இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ என்பவர் தனது The Challenge எனும் புது திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு சென்றுள்ளார். நேற்று தனது படக்குழுவுடன் ராக்கெட்டில் புறப்பட்ட அவர் பெரும்பாலான காட்சிகளை ரியல் ஸ்பேஷ் ஸ்டேஷனில் எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவல்தான் தற்போது சோஷியல் மீடியாவில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

இதுவரை ஹாலிவுட் இயக்குநர்கள் சிஜி மாயாஜாலத்தை வைத்து செவ்வாய் கிரகம் முதற்கொண்டு ஒட்டுமொத்த அண்டத்தையும் மிக எளிதாக ரசிகர்களுக்கு காட்சிபடுத்தி அசத்திக் கொண்டிருந்தனர். அந்த பட்டியலில் “Martian“, “Gravity“, “Interstellar“ போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி மாயாஜாலம் காட்டுவதையெல்லாம் விட்டுவிட்டு நிஜமாகவே விண்வெளியில் பெரிய பெரிய விமானங்களைப் பிடித்து தொங்க வேண்டும். அந்த உண்மையான அனுபவத்தை ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கனவு கண்டார். இதற்காக தனது “மிஷன் இம்பாசிபிள்“ பட வரிசையின் புதிய படத்திற்கு நாசாவுடன் இணைந்து விண்வெளியில் ஷுட்டிங் நடத்துவதைப் பற்றியும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த கனவுகளுக்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

இந்நிலையில் நடிகர் டாம் க்ரூஸை முந்திக்கொண்டு ரஷ்யாவை சேர்ந்த படக்குழு விண்வெளியில் உள்ள உண்மையான ஸ்பேஷ் ஸ்டேஷனில் படப்பிடைப்பை நடத்த முடிவுசெய்துள்ளது. இதையடுத்து நேற்று கஜகஸ்தானில் இருந்து இந்திய நேரப்படி 2.25 மணிக்கு ராக்கெட் மூலம் புறப்பட்டு சென்ற படக்குழுவில் நடிகை யூலியா பெரிசில்ட் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.

ஏவியேஷன் பற்றிய அனுபவம் இல்லாத இந்த நடிகைக்குப் பல மாதங்கள் பயிற்சி கொடுக்கப்பட்டதாவும் அதையடுத்து படக்குழுவுடன் அவர் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதாவும் கூறப்படுகிறது. என்னதான் பயிற்சிக் கொடுக்கப்பட்டாலும் உண்மையான ஸ்பேஷ் ஸ்டேஷனில் ஷுட்டிங் நடத்துவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? இதனால்தான் இயக்குநர் க்ளிம் ஷிபென்கோவின் படக்குழுவை பார்த்து பலரும் பயந்தையும் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தத் துவங்கி இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.