close
Choose your channels

காதலியை காரின்மேல் கட்டி ஓட்டிச்சென்ற காதலன்? காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்…

Thursday, August 5, 2021 • தமிழ் Comments

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை காரின்மீது மூட்டைப்போல கட்டிவைத்து ஒட்டிச்சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. 5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற இந்த வீடியோவிற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா? என நெட்டிசன்கள் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலிக்கு தன்மீது நம்பிக்கை இருக்கிறதா என அறிந்து கொள்ள நினைத்து இருக்கிறார். இதற்காக காதலியின் கைகள் இரண்டையும் காரோடு சேர்த்துக் கட்டிவைத்து நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச்சென்றுள்ளார். இப்படி செய்தும் அந்தக் காதலி கொஞ்சமும் பயப்படாமல் தன்னுடைய காதலன் கையைப் பிடித்தவாறு காரின்மேல், சாலையில் வலம் வந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை பாராட்டி வருகின்றனர். மேலும் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோ காவல் துறையின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இதனால் சாலை விதிமீறலுக்காக 750 ரூபெல் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz