close
Choose your channels

உள்ளாடையுடன் டூட்டி பார்த்த நர்ஸ்: மாடலாக வருமாறு பிரபல நிறுவனம் அழைப்பு

Friday, May 22, 2020 • தமிழ் Comments

ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் நர்ஸாக பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் உள்ளடை மட்டும் அணிந்து டூட்டி பார்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடுமையான வெப்பம் காரணமாகவே தான் உள்ளாடையுடன் பி.பி.ஈ உடையணிந்து பணி செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரது விளக்கத்தை ஏற்று கொள்ளாத மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் உள்ளாடையுடன் பணி செய்த நர்ஸ் பெயர் நடியா என்றும் அவரது வயது 23 என்றும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது மற்ற புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுனத்தின் தலைவரான அனஸ்தேசியா யகுஷேவா என்பவர் நர்ஸ் நடியா விருப்பப்பட்டால் எங்கள் நிறுவனத்தின் மாடலாக நடிக்கலாம் என்றும் அவருக்காக பல புதிய உள்ளாடை தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். அவர் விருப்பப்பட்டால் வருடாந்திர ஒப்பந்தமும் செய்து கொள்ள தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாடை நிறுவனத்தின் அழைப்பை இன்னும் நடியா ஏற்று கொள்ளவில்லை என்றும், அவருக்கு நர்ஸ் பணி செய்வதே கொள்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சமூக வலைத்தள பயனாளிகள் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz