விஜய்யின் தந்தை இயக்கத்தில் நடிக்கும் விஜய்?

  • IndiaGlitz, [Thursday,October 15 2015]

விஜய்யின் 59வது படத்தை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு, விஜய்யின் தந்தை இயக்கவுள்ள ஒரு படத்தையும் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனரும், இளையதளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது இதுதான் தனது கடைசி படம் என்றும் இனிமேல் படங்களை இயக்க மாட்டேன்' என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது 'நையப்புடை' என்ற படத்தை எஸ்.ஏ.சி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் பா.விஜய் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் எஸ்.ஏ.சியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ரஜினி, விஜய் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் தாணு, இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

கமல்ஹாசனின் 'தூங்காவனம்' ரிலீஸ் தேதி?

வரும் தீபாவளி தினத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' மற்றும் தல அஜீத் நடித்த 'வேதாளம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்...

'வேதாளம்' படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர்

அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' படத்தின் கதை கிட்டத்தட்ட பாட்ஷா பாணியில் இருப்பதாக கூறப்படுகிறது...

மீண்டும் முதல் காதலுக்கு திரும்பிய த்ரிஷா

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை த்ரிஷா சமீபத்தில் பிரபல தொழிலதிபர் வருண் மணியன்...

அஜீத்தின் முதலாளி ஆகிறார் சூரி?

அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' படத்தில் அஜீத் டாக்சி டிரைவராக நடித்து வருவதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில்...

எம்.எல்.ஏ ஆகிறார் 'மெட்ராஸ்' நடிகை

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படத்தின் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை கேதரின் தெரசா...