close
Choose your channels

'நான் சிகப்பு மனிதன்' பாணியில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் அடுத்த படம்!

Tuesday, September 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பாக்கியராஜ், அம்பிகா நடிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’நான் சிகப்பு மனிதன்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இதே பாணியில் தற்போது எஸ்ஏ சந்திரசேகர் ’நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கும் 71வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி,
ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபின் இசையில் உருவாகும் இந்த படத்தில் சமுத்திரக்கனி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவரது மனைவியாக இனியாவும் மகளாக டயானா ஸ்ரீ நடிக்கிறார்கள். வித்தியாசமான வில்லன் கேரக்டரில் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் நுணுக்கங்களை கையிலெடுத்து பரபரப்பான பல படங்களை இயக்கிய எஸ்ஏ சந்திரசேகரன் தற்போது ’நான் சிகப்பு மனிதன்’ பாணியில் இயக்கியுள்ள ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.