விஜய் கதாநாயகன் ஆனது எப்படி? எஸ்.ஏ.சி

  • IndiaGlitz, [Tuesday,December 22 2015]

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் நையப்புடை' படத்தின் அறிமுகவிழா இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சி, '75 வயதான தன்னை இந்த படத்தின் இயக்குனர் விஜயகிரண் டூப் இல்லாமல் காரிலிருந்து குதிக்க செய்து விட்டதாகவும், படம் பார்த்து தான் மிரண்டு போனதாகவும் கூறியுள்ளார்.


மேலும் நடிப்பு, இயக்கம் என அனைத்தையும் விட்டுவிட்டு ஓய்வில் இருக்கும் தன்னை தற்போது நடிக்கச் சொல்லி வெற்றிமாறன் உள்பட ஒருசில இயக்குனர்கள் அழைத்துள்ளதாகவும் எஸ்.ஏ.சி கூறினார்.

மேலும் விஜய் குறித்து எஸ்.ஏ.சி குறிப்பிட்டபோது, 'விஜய் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, "அவரிடம் நடிகராவது சுலபமல்ல, நடிகராக ஆசைப்பட்டால் மட்டும் போதாது. முதலில் அதற்குத் தகுதியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியதாகவும், அதுமட்டுமின்றி அவரை அதிகாலையில் எழுப்பி நடனம் மற்றும் ஆக்சன் பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், இந்த இரண்டும் இருந்தால் கதாநாயகன் ஆகி விடலாம் என்று தான் அவருக்கு நம்பிக்கை ஊட்டியதாகவும் கூறினார். எதிர்பார்த்தது போலவே இன்று விஜய் வளர்ந்து வியாபார ரீதியான கதாநாயகன் ஆகியுள்ளதாக அந்த பயிற்சிகளே காரணம் என எஸ்.ஏ.சி தன்னுடைய பேச்சில் கூறியுள்ளார்.

More News

மீண்டும் மோதுகிறதா விஜய்-சூர்யா படங்கள்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்யின் 'தெறி'க்காக 40 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றிய அட்லி

விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...

ரஜினி பேசும் வசனங்களை 10 நாட்களுக்கு கேட்க முடியாது. எஸ்.எஸ்.ராஜமெளலி

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் 'பாகுபலி' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை எடுத்து இந்திய திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குனர்...

'சிங்கம்' படத்தை எதிர்பார்த்து வரவேண்டாம். 'பசங்க 2' பிரஸ்மீட்டில் சூர்யா

இயக்குனர் பாண்டியராஜ் இயகத்தில் சூர்யா, அமலாபால் நடித்த 'பசங்க 2' திரைப்படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடந்தது.

பொங்கல் போட்டியில் இருந்து விலகியது அரண்மனை 2'

ஜனவரியில் வரும் பொங்கல் திருநாளில் நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த நாளில் படத்தை வெளியிட பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். 2016...