close
Choose your channels

'சாமி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

Friday, September 7, 2018 • தமிழ் Comments

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாமி 2' திரைப்படம் செப்டம்பர் ரிலீஸ் என கடந்த சில நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமான ஒருவர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

அந்த டுவீட்டில் வரும் 20ஆம் தேதி 'சாமி'யின் தரிசனத்திற்கு தயாராக இருக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே 'சாமி 2' திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' செப்டம்பர் 13ஆம் தேதியும், மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த  வானம்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் செப்டம்பர் 20ஆம் தேதி 'சாமி 2' ரிலீஸானால் ரசிகர்கர்ளுக்கு தொடர் விருந்து கிடைக்கும் என்பது மட்டும் உறுதி