நான் தான் அந்த தோழி.. 'சச்சின்' ரீ ரிலீஸ் ஆனதால் டிரெண்டிங் ஆன நடிகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆன நிலையில், 20 ஆண்டுகள் கழித்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும், அதற்குள் இந்த படம் ஆறு கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடித்த நடிகை திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆன நிலையில், யார் அந்த நடிகை என்று கூகுளில் அவரைப்பற்றி ரசிகர்கள் தேட ஆரம்பித்து விட்டார்கள். தான் எப்படி திடீரென்று டிரெண்டிங் ஆனோம் என்பதை அறிந்த அந்த நடிகை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், "நான் தான் ஜெனிலியா தோழியாக நடித்த நடிகை. எனது பெயர் ராஷ்மி முரளி. ஒரு சின்ன கேரக்டரில் நடித்ததை ஞாபகம் வைத்து, அனைவரும் என்னை ட்ரெண்டிங் செய்துள்ளதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு ஆகியோர்களுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
20 ஆண்டுகள் கழித்து என்னுடைய நடிப்பிற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்ததை நினைத்து இப்போது நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விலைமதிப்பில்லா உங்களது அன்பை, பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறேன்," என்று பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com