வாஜ்பாய் மறைவுக்கு ரஜினிகாந்த், சச்சின் இரங்கல்

  • IndiaGlitz, [Thursday,August 16 2018]

முன்னாள் பாரத பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன்னர் சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வாஜ்பாய் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய தலைவர் வாஜ்பாய் அவர்களின் மறைவு அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதேபோல் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டரில், 'இன்று இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நமது தேசத்திற்கு எண்ணற்ற சேவை செய்த வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

More News

முதல்வருடன் நடிகர் கார்த்தி சந்திப்பு

கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மழைநீர் வாய்க்காலில் மீட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் நடிகை

நேற்று காலை சென்னை வளசரவாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி இருந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி-பிரபுதேவா படங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' மற்றும் 'ஜூங்கா' ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!

கடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயர்த்துக்குள்ளாகியுள்ளது.

பாலாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த போட்டியாளர்கள் அனைவருமே சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் வாய்ப்புகள் பெற்றுள்ளனர்.