மெஸ்ஸிக்கு கிடைக்காத விருதை பெற்ற சச்சின்: குவியும் பாராட்டுக்கள்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் என்ற அமைப்பு விருது வழங்கி கெளவிரத்துள்ளது அவருடைய ரசிகர்களுக்கு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது

பெர்லினில் நேற்று நடைபெற்ற விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு துறையின் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் சிறப்பு விருது ஒன்று வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி கோப்பையை வென்றபின் சச்சின் தெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் தூக்கிகொண்டு மைதானம் முழுக்க சுற்றி வந்தனர். அப்போது ஒட்டுமொத்த மைதானமும் சச்சின் சச்சின் என்ற ஒலியே ஒலித்தது

இந்த தருணத்திற்காக விளையாட்டு துறையின் சிறந்த தருணம் என்ற விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக இந்த விருதுக்கு 20 பேர்களின் பெயர்கள் விருதுப் பட்டியலில் இருந்தது என்பதும் அந்த பட்டியலில் இருந்த கால்பந்து வீரர் மெஸ்சி, கார்பந்தய வீரர் ஹாமில்டன் ஆகியோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது