close
Choose your channels

சச்சினை ஏன் எல்லோருக்கும் பிடிக்கின்றது? இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்!

Thursday, August 29, 2019 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சினை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரது விளையாட்டை விமர்சனம் செய்பவர்கள் கூட அவரது மனித நேயத்தை, பிறருக்கும் உதவும் குணத்தை பாராட்டி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சச்சின் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதியோர் இல்லம் ஒன்றுக்கு செல்லும் சச்சின், அங்கு தங்கியிருக்கும் வயதான பெண்களுடன் கேரம்போர்டு விளையாடுகிறார். அவர்களிடம் அன்பாக சில வார்த்தைகள் பேசி அவர்களுடைய கேரம்போர்டு விளையாடும் திறமையை பாராட்டுகிறார்.

ஸ்போர்ட்ஸ் என்பது அனைத்து வயதினர்களுக்கும் தேவையான ஒன்று என்றும், மனதையும் உடம்பையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க அது உதவும் என்பதையும் சச்சின் குறிப்பிடுகிறார். ஸ்போர்ட்ஸின் அவசியத்தையும், மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் இந்த வீடியோவால் சச்சின் மீதான மதிப்பும் மரியாதையும் இன்னும் அதிகரிக்கின்றது என்பதே உண்மை
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.