மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சச்சின் ஆந்த்தம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,May 08 2017]

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இசையுலக ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முதலில் இணைந்துள்ள 'சச்சின்: தி பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது.

ஆம், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சச்சின் ஆந்த்தம்' (Sachin Anthem) என்ற பாடலை நாளை சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்து வெளியிடவுள்ளனர். கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கரின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் நாளை வெளியானவுடன் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். இந்த படத்தை '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

எல்லா புகழும் ரஹ்மானுக்கே! எம்.எம்.கீரவானியின் நெகிழ்ச்சியான பதில்

இந்திய திரைப்பட சரித்திரத்தில் இடம்பெற்ற 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் காரணம் என்றாலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானியின் பங்கு கொஞ்சம் அதிகம்தான்...

'கபாலி'யை முறியடித்த 'பாகுபலி 2', எந்திரனையும் நெருங்குகிறது

இந்திய சினிமாவின் கெளரவம் என்று புகழப்படும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் பத்து நாள் சென்னை வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் பத்து நாள் வசூலை முறியடித்தது என்பதை சிறிது நேரத்திற்கு முன்னர் பார்த்தோம்...

'கட்டப்பா'வின் இன்னொரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

'பாகுபலி' முதல் பாகத்தை பார்த்த லட்சக்கணக்கான ரசிகர்கள், 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற ரகசியத்தை இரண்டு வருடங்களுக்கு பின்னர் கடந்த வாரம் தெரிந்து கொண்டனர்...

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

சென்னை வடபழனி பகுதியில் சிவன் கோவில் தெற்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்...