close
Choose your channels

மனைவியுடன் சென்று பில்கேட்ஸை சந்தித்த சச்சின் தெண்டுல்கர்.. அவரே பகிர்ந்த புகைப்படம்..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனமான பில்கேட்ஸை சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் சென்று சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவர் இந்தியாவில் பல அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நிதி அளித்து வருகிறார் என்பதும் இந்தியாவின் சுகாதாரத்திற்காக அவர் கோடிக்கணக்கான பணத்தை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பில்கேட்ஸை சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து சச்சின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் தான். இந்த சந்திப்பு எங்கள் அறக்கட்டளையால் செயல்படும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த பல தொண்டு விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பாக கிடைத்தது’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் பில்கேட்ஸ் உடன் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.