மாடலிங்க் துறையில் நுழைந்த சச்சின் மகள்… தீயாய் வைரலாகும் பிக்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் முடிசூடா மன்னனாக வாழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவருடைய பேட்டிங் திறமைக்கு ரசிகர்கள் மட்டுமல்ல இன்றைய இளைய தலைமுறை கிரிக்கெட்டர்களும் அடிமைகளாக இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய இவர் அவ்வபோது சில விளம்பரங்களில் தோன்றி வருகிறார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி தம்பதிகளின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் தற்போது முதல் முறையாக மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் பிரபல ஆடை விளம்பர நிறுவனம் ஒன்றிற்காக இவர் முன்னணி மாடல்களாக இருந்துவரும் பனிதா சாந்து, தானியா ஷரோப் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சாரா, இதற்கு முன்பே ஸ்டைலிஷ் உடைகளை அணிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் வெளியிட்டு வந்தார். இதனால் ஒன்றரை லட்சம் ஃபாலோயர்களை இவரை பின்தொடர்கின்றனர். மேலும் தனது அம்மா அஞ்சலியைப் பின்பற்றி லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் சாரா டெண்டுல்கர் மருத்துவர் பட்டம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்மாவை பின்பற்றி மகள் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும் தற்போது சாரா மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்னொரு பக்கம் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் தீராத ஆர்வம் கொண்டு உள்நாட்டு போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெள்ளாவி நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்ற “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?“

20 வருட சினிமா அனுபவம்… பூரிப்பில் பிரபல நடிகையின் கணவர் வெளியிட்ட வீடியோ!

“இஷ்டம்“ எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை

ஆக்ஷன் கிங் வயிற்றில் பஞ்ச் செய்து விளையாடிய தமிழ் நடிகை… வைரல் வீடியோ!

தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன் வயிற்றில் பஞ்ச் செய்து பிரபல தமிழ் நடிகை ஒருவர்

சீரியல் நடிகையின் திருமணம்… வைரலாகும் நட்சத்திரா நாகேஷின் புகைப்படங்கள்!

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிப் பின்னர் சீர்யல் நடிகையாகவும் தொடர்ந்து வெள்ளித்திரையில்

நடிகை கத்ரீனா- விக்கி கௌஷால் திருமண வீடியோ… இந்த ஓடிடி தளத்திற்கு விற்பனையா?

பாலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில்