கோடியில் புரளும் கால்பந்து வீரரின் டிஸ்ப்ளே உடைந்த மொபைல்: என்ன காரணம் தெரியுமா?

தற்போது நடுத்தர வர்க்கத்தினர் கூட மொபைல் போனில் டிஸ்ப்ளே உடைந்துவிட்டால் உடனே அந்த மொபைல் போனை தூக்கி போட்டு விட்டு புதிய மொபைல் போனை வாங்கி கொண்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர் ஒருவர் உடைந்த டிஸ்பிளே உள்ள மொபைலை பயன்படுத்தி வருகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சாடியோ மானே என்ற கால்பந்து வீரர் இந்திய ரூபாயில் ஒரு வாரத்திற்கு 140 கோடி சம்பாதிப்பதாக தெரிகிறது. அவ்வளவு சம்பாதிக்கும் அவர் சமீபத்தில் விமான நிலையத்தில் இருந்து வரும்போது உடைந்த மொபைலுடன் காணப்பட்டார்.

இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ’டிஸ்ப்ளேவை சரி செய்து விடுவேன்’ என்று கூறினார். அதற்கு செய்தியாளர்கள் ’நீங்கள் ஏன் டிஸ்பிளேவை சரி செய்ய வேண்டும், வேறு மொபைல் வாங்கலாமே? என்று கேட்டதற்கு ’கண்டிப்பாக வாங்கலாம் தான். என்னுடைய வருமானத்தில் ஒரு மொபைல் என்ன, ஆயிரம் மொபைல்கள் கூட வாங்கலாம். ஆனால் அதை நான் ஏன் வாங்க வேண்டும்? நான் வறுமையை பார்த்திருக்கிறேன், சாப்பாட்டுக்கு கூட இளம் வயதில் கஷ்டப்பட்டு இருக்கிறேன், நான் சிறு வயதில் வறுமை காரணமாக படிக்க முடியவில்லை, காலனி கூட இல்லாமல், நல்ல உடை இல்லாமல் இருந்திருக்கின்றேன்.

இன்று நான் நிறைய சம்பாதிக்கிறேன் என்பதற்காக அனாவசியமாக செலவு செய்ய விரும்பவில்லை. என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகள் என்னை போல் கஷ்டப்பட கூடாது. அவர்களுக்கு புதிய காலணிகள் உடைகளும் என்னுடைய பணத்திலிருந்து வாங்கி கொடுக்கிறேன். நான் என்னுடைய பணத்தில் வசதியாக வாழ்வதற்கு பதிலாக அந்த பணத்தை என் நாட்டு மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். அவர் இந்த பதிலை கேட்டு உண்மையிலேயே அவர் அற்புத மனிதன் தான் என செய்தியாளர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

More News

ரூ.3.50 கோடி சம்பளம் உள்ள வேலையை உதறிய இளைஞர்: காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

3.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென வேலையை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணத்தை அவர் கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அப்ப சூர்யா ரோலக்ஸ் இல்லையா? அதிர்ச்சி தகவல்

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'அந்த இரண்டு படங்கள் போல் எதிர்பார்க்க வேண்டாம்': நயன்தாரா அடுத்த பட இயக்குனரின் பதிவு

தனது முந்தைய இரண்டு படங்களை போல் இந்த படத்தை எதிர்பார்க்க வேண்டாம் என நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கிய இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

'விக்ரம்' படம் பார்த்து ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து வெளியான 'கேஜிஎப் 2' மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்' ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில்

 சூர்யாவின் ஃபயர் காட்சியில் நிஜமாகவே தீப்பற்றிய திரை: 'விக்ரம்' திரையிட்ட தியேட்டரில் பரபரப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த வாரம் ரிலீசாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன