ஒரே நேரத்தில் விஜய்சேதுபதியுடன் நடிக்கும் அண்ணன் - தம்பி நடிகர்கள்!

  • IndiaGlitz, [Sunday,March 17 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிசியாகிவிட்டார் என்பது தெரிந்ததே. சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்ம ரெட்டி படத்தில் ஏற்கனவே முக்கிய கேரக்டரில் நடித்து வரும் விஜய்சேதுபதி, தற்போது பஞ்ச வைஷ்ணவ தேஜ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பஞ்ச வைஷ்ணவ தேஜ் சகோதரர் சாய் தரம்தேஜ், விஜய்சேதுபதியின் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே நேரத்தில் அண்ணன் தம்பிகள் நடிக்கும் படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி - விஜய் சந்தர் இணையும் இந்த படத்தை விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பேத்ராஜ் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது என்பது தெரிந்ததே.