கமல்-ரஜினி நாயகியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: சாய்பல்லவியுடன் பேச்சுவார்த்தை!

  • IndiaGlitz, [Monday,October 12 2020]

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’காதலா காதலா’ ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’ ’படையப்பா’ விஜயகாந்துடன் ‘சொக்கத்தங்கம்’ உள்பட பல திரைப் படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சௌந்தர்யா. பாலிவுட்டிலும் அமிதாப்பச்சனுடன் இவர் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த சௌந்தர்யா, ஹெலிகாப்டர் ஒன்றில் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார். அவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சவுந்தர்யா கேரக்டரில் நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

குஷ்புவுடன் பாஜகவில் இணைந்த மேலும் இருவர்: பரபரப்பு தகவல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்று காலை விலகிய நடிகை குஷ்பு சற்று முன்னர் பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்

பெஸ்ட் ஜிம்னாஸ்டிக் பல்டி: குஷ்புவை கிண்டல் செய்த பாஜக ஆதரவு நடிகர்!

நடிகை குஷ்பு பாஜகவில் சேர்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திர்கு குஷ்பு சென்றதாகவும் அவர் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஜேபி நட்டாவை

பிக்பாஸ் வீட்டில் நுழையும் அர்ச்சனா: சனம் வெளியேறிய பின்னரா?

கடந்த வாரம் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்ஜே அர்ச்சனாவும் ஒருவர் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது. ஆனால் கடந்த ஞாயிறன்று அறிமுகம் செய்யப்பட்ட

எல்லாருக்கும் ரெண்டு முகம் இருக்கும்: சுரேஷால் ஆரம்பமாகும் அடுத்த சண்டை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரே வாரத்தில் மூன்று நான்கு சண்டைகளை பார்த்துவிட்டோம். குறிப்பாக சுரேஷ்-அனிதாசம்பத், சனம்ஷெட்டி- பாலாஜி முருகதாஸ், சனம்ஷெட்டி-ரேகா

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் புதிய தொழில் நிறுவனங்கள்… முதல்வரின் அதிரடி!!!

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்