சிரஞ்சீவிக்கு 'நோ', மகேஷ்பாபுவுக்கு 'யெஸ்': சாய்பல்லவியின் அதிரடி முடிவு!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படத்தில் தங்கையாக நடிக்க முடியாது என்று கூறிய சாய்பல்லவி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுக்கு தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ’வேதாளம்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்து வரும் நிலையில் லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க சாய்பல்லவியிடம் தான் படக்குழுவினர் முதலில் அணுகினர். ஆனால் அவர் தங்கை கேரக்டரில் நடிக்க முடியாது என்று மறுத்ததாகவும், இதனையடுத்தே அந்த கேரக்டரில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் மகேஷ்பாபு தங்கையாக நடிக்க சாய்பல்லவி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி யோசித்ததாகவும், ஆனால் திரிவிக்ரம் படத்தை தவற விடக்கூடாது என்ற காரணத்தினால் அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

இந்த வார ஓடிடி ரிலீஸில் என்னென்ன படங்கள்?

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக ஓடிடி தளங்களிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த பம்பர் லாட்டரி!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தியை பார்த்து வந்த நிலையில்

தோனி கலெக்ஷனில் இணைந்திருக்கும் பழைய கார்… அப்படியென்ன ஸ்பெஷல்?

ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு பெயர்போன நம்முடைய கேப்டன் தல தோனி

பிரபல இயக்குனரின் வழக்கு: சின்மயி, லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பதிவு செய்த வழக்கில் பாடகி சின்மயி மற்றும் கவிஞர் லீனா மணிமேகலை ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

கரகர குரலால் வேலை இழப்பு... நியாயம் கேட்ட பெண்மணிக்கு 1 கோடி கிடைத்த சம்பவம்!

இங்கிலாந்த நாட்டிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் சத்தமாகப்