close
Choose your channels

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 திரையுலக பிரபலங்கள்!

Wednesday, May 15, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் 1, பிக்பாஸ் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் சீரியலை கூட மறந்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான புரமோஷன் ஷூட்டிங்கில் சமீபத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. நடிகைகள் லைலா, சுதா சந்திரன், ரமேஷ் திலக் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முவருமே இதனை மறுத்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று திரையுலக பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் நடிகை சாக்சி அகர்வால், நடிகை அல்யா மானசா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர்கள் தான். 

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்சி அகர்வால் தற்போது சிண்ட்ரெல்லா, உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி' சீரியலில் 'செண்பா கேரக்டரில் நடித்து வரும் அல்யா மானசாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம். மேலும் குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz